விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கேரளத்தில் புதிதாக 12,161 பேருக்கு கரோனா

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2021, 2:50 pm

DIN


கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 90,394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 12,161 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 13.45 சதவிகிதம்.

மேலும் 17,862 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 155 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,965 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 1,43,500 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12.7 சதவிகிதத்தினர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92.2 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 40.5 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.