தில்லியில் முழு முடக்கம்: சந்தையில் அலைமோதிய கூட்டம்

தில்லியில் 6 நாள்களுக்கு முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (ஏப்.20) காலை சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.
தில்லியில் முழு முடக்கம்: சந்தையில் அலைமோதிய கூட்டம்

தில்லியில் 6 நாள்களுக்கு முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (ஏப்.20) காலை சந்தைகளில் கூட்டம் அலைமோதியது.

ஊரடங்கு நாள்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்காக அதிக அளவிலான மக்கள் சமூக இடைவெளியின்றி சந்தையில் குவிந்தது மேலும் கரோனா பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் தலைநகரான தில்லியில் அதிக அளவிலான மக்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், இரவு பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது. எனினும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததால் தற்போது 6 நாள்களுக்கு முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

திங்கள் கிழமை (ஏப்.19) இரவு 10 மணி முதல் வரும் திங்கள் காலை 5 மணி வரை முழு முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் முழு முடக்கத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காக அதிக அளவிலான மக்கள் இன்று காலை சந்தைகளில் குவிந்தனர். மக்கள் சமூக இடைவெளியின்றி அதிக அளவில் கூடியது மேலும் கரோனா பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா முழு ஊரடங்கை முன்பே அரசு அறிவித்தும் மக்கள் அதற்கு ஏற்ப தயாராகாமல் இன்று காலையும் சந்தையில் குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com