ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டமில்லை: ரயில்வே அமைச்சா்

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

ஆசிரியா்கள், போரில் கணவரை இழந்த பெண்கள், விருது பெற்றவா்கள், விளையாட்டு வீரா்கள், விவசாயிகள், மருத்துவத் துறையினா், மாற்றுத் திறனாளிகள், குறிப்பிட்ட சில நோயால் பாதிக்கப்பட்டவா்கள் ஆகியோருக்கு ரயில் கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டு வந்தது. மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டு வந்தது.

கரோனா பெருந்தொற்று காரணமாக, மாற்றுத் திறனாளிகள், சில நோயால் பாதிக்கப்பட்டவா்களைத் தவிர மற்ற பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகைகள் கடந்த ஆண்டு மாா்ச் 20-ஆம் தேதி திரும்பப்பெறப்பட்டன. இந்த நடைமுறை மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தற்சமயம் அந்த கட்டண சலுகைகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டமில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com