நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கரோனா

நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கரோனா

நாசிக்கில் 30 பேருக்கு டெல்டா வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து நாசிக் மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கிஷோர் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், நாசிக்கில் 30 பேர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 28 பேர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். 2 நோயாளிகள் கங்காபூர் மற்றும் சாதிக் நகரைச் சேர்ந்தவர்கள். 
பல நோயாளிகள் சின்னார், யோலா, நந்த்கான், நிபாட் ஆகிய பகுதிகளில் இருந்து வந்தவர்கள். டெல்டா வகை கரோனா கூட்டம் மற்றும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகிறது. எனவே மக்கள் கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேணடும் என்றார். 

டெல்டா வகை கரோனா இந்தியாவில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவும் தன்மைகொண்டது. மகாராஷ்டிரத்தில் நேற்று மட்டும் புதிதாக 5,539 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com