கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அனுமதி: பிகார் முதல்வர்

பிகாரில் கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)
நிதீஷ் குமார் (கோப்புப் படம்)

பிகாரில் கல்வி நிலையங்கள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததன் எதிரொலியாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பொதுமுடக்கம் விதிக்கப்பட்டது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் கரோனா குறைந்து வருகிறது.

பிகாரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவுத்துள்ளார். 

அதன்படி கோயில்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றை திறக்கவும் முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com