2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கேரளத்தில் 2ம் நாளாக 30ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு

கேரளத்தில் 2ம் நாளாக 30ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 1:01 pm

DIN

கேரளத்தில் 2ம் நாளாக 30ஆயிரத்துக்கு மேல் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 1,66,397 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 30,007 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 3,873, கோழிக்கோட்டில் 3,461, திரிச்சூர் 3,157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் இன்று மேலும் 162 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 20,134ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து இன்று 18,997 பேர் மீண்டனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,11,625ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,81,209 பேர் சிகிச்சையில் உள்ளனர். 4,87,246 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.