மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

மகாராஷ்டிரம்: ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட 7 பேர் எங்கிருந்து வந்தவர்கள்?

மகாராஷ்டிரத்தில் புணேவைச் சேர்ந்த 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 டிசம்பர் 2021, 3:49 pm


மகாராஷ்டிரத்தில் புணேவைச் சேர்ந்த 7 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 7 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதன் விவரத்தை சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார். சகோதரரைச் சந்திப்பதற்காக நைஜீரியாவிலிருந்து இரு மகள்களுடன் புணே வந்த பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவருடன் தொடர்பிலிருந்த இரு மகள்கள், சகோதரர், சகோதரரின் மகன்கள் இருவர் என மொத்தம் 6 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு பரவியுள்ளது. மற்றொருவர் கடந்த வாரம் பின்லாந்திலிருந்து புணே திரும்பியுள்ளார்.

இதன்மூலம், மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவிலிருந்து தில்லி வழியாக நவம்பர் 23-ம் தேதி மும்பை வந்த நபருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.