/

குடும்பத் தகராறு: 7 பெண் குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு

குடும்பத் தகராறு காரணமாக, 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

News image
குடும்பத் தகராறு: 7 பெண் குழந்தைகளின் தாய் எடுத்த விபரீத முடிவு
Updated On :28 ஜனவரி 2024, 5:38 am

PTI


கோடா: குடும்பத் தகராறு காரணமாக, 40 வயது மதிக்கத்தக்க பெண், தனது 5 பெண் குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, பெண்ணின் கணவர் சென்றிருந்த நிலையில், ஞாயிறன்று தனது 5 பெண் குழந்தைகளுடன், கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை, கிணற்றில் 6 பேரிடன் உடல்களும் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்த கிராம மக்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததும், அவர்கள் விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

5 பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட பெண் ஷிவ்லால் பஞ்ஜராவின் மனைவி பதம்தேவி என்றும், அவருக்கு 7 பெண் குழந்தைகள் இருப்பதும், தெரிய வந்துள்ளது.

4 முதல் 14 வயதுடைய ஐந்து குழந்தைகளை தன்னுடன் கிணற்றுக்கு அழைத்துச் சென்ற பதம்தேவி, அவர்களை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது இரண்டு பெண் பிள்ளைகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால், அவர்கள் உயிர்தப்பியதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.