ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாகிவிட்டது: பிரிட்டன் அமைச்சர்

பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசுகையில், புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு, நாட்டில் சமூகப் பரவலாகிவிட்டது என்று கூறினார்.
ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாகிவிட்டது: பிரிட்டன் அமைச்சர்
ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாகிவிட்டது: பிரிட்டன் அமைச்சர்


லண்டன்: பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் நேற்று பேசுகையில், புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் பாதிப்பு, நாட்டில் சமூகப் பரவலாகிவிட்டது என்று கூறினார்.

தென்னாப்ரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை பிரிட்டனில் 336 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிரிட்டனில், 261 நோயாளிகள் இங்கிலாந்திலும், 71 பேர் ஸ்காட்லாந்திலும், 4 பேர் வேல்ஸிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை 336 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த பாதிப்புகளில் பெரும்பாலானோருக்கு வெளிநாட்டுப் பயணங்களுடனோ, வெளிநாட்டுப் பயணிகளுடனோ தொடர்பில்லை. எனவே, ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாக மாறிவிட்டது.

பிரிட்டனின் அபாய நாடுகளின் பட்டியலில் நைஜீரியாவும் சேர்ந்துவிட்டது. அங்கிருந்து வரும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com