இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இந்தியாவிற்கு பாதிப்பு?

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிற நிலையில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிற நிலையில் இந்தியாவிற்கு பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியாவின் ஃப்ளோரெஸ் தீவுப் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக, சுனாமி அலைகள் எழும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7.3 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தோனேசியாவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்டால் இந்திய கடலோரப் பகுதிகளிலும் அதன் தாக்கம் இருக்கும் என்பதால் இந்தியாவிலும் சுனாமி பாதிப்பு வருமா என இணையத்தில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் இந்தியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என இந்திய சுனாமி  எச்சரிக்கை மையம் தெரிவித்திருக்கிறது.

கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமத்தரா பகுதியில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் தமிழக கடலோரப் பகுதிகள் சுனாமியால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com