மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இருவருக்கு கரோனா

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :28 டிசம்பர் 2021, 2:07 pm

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கரோனா அச்சுறுத்தலுக்கிடையே கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு அமைச்சரவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இரண்டு அமைச்சர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர கல்வித் துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட், பழங்குடிகள் நலத் துறை அமைச்சர் கே.சி. பாடவி ஆகியோருடன் பாஜக எம்.எல்.ஏ. சமீர் மகி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசிய அவர், கரோனா தொடர்பாக லேசான அறிகுறி மட்டுமே உள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.