கோவாவில் கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு சிலை

உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கோவாவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ முன்னணி கால்பந்து வீரராக உள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு பிரபலமான கோவாவில் ரொனால்டோவிற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவா பானாஜியில் அமைக்கப்பட்டுள்ள முழு உருவச் சிலையானது புதன்கிழமை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் மைக்கேல் லோபோ, “உள்ளூர் அளவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளதாகவும், கால்பந்து வீரர்களுக்கு இந்த சிலை உற்சாகத்தைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com