
ஜோர்டான் நாடாளுமன்றத்தில் நடந்த மோதல்
ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் அரசமைப்பு திருத்தம் தொடர்பான விவாதத்தின்போது உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஜோர்டான் நாட்டின் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசமைப்பில் திருத்தம் செய்வது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அரசமைப்பின்படி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை வழங்குவது தொடர்பாகவும், பெண்களை அப்பட்டியலில் இணைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | வெளிநாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்திய இஸ்ரேல்
இந்நிலையில் விவாதத்தின் போது இருதரப்பினரிடையே மோதல் மூண்டது. இதனால் அவையிலிருந்து அனைவரும் வெளியேறுமாறு அவைத்தலைவர் அப்துல் கரிம் துக்மி உத்தரவிட்டார்.
Several deputies traded punches in a brawl in Jordan's parliament after a verbal row escalated when the assembly speaker called on a deputy to leave, witnesses said https://t.co/4WVq2L1Div pic.twitter.com/RqA04SZHeY
— Reuters (@Reuters) December 28, 2021
இதனால் ஆத்திரமடைந்த பேரவை துணைத்தலைவர் சுலைமான் அபு யாங்யா, அவையை நடத்த துக்மிக்கு தார்மீக உரிமையில்லை என தெரிவித்தார்.
இதையும் படிக்க | சூடான் தங்க சுரஙகத்தில் நிலச்சரிவு: 38 பேர் பலி
இந்த வாக்குவாதம் இருவருக்கிடையேயான தாக்குதல் சம்பவத்திற்கு வழிவகுத்தது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பானது. அதனைத் தொடர்ந்து சக உறுப்பினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.