
வெளிநாட்டுப் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இஸ்ரேல் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஆப்பிரிக்க நாடுகள் பலவும் பல்வேறு நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகளின் பட்டியலில் உள்ளன. இந்நிலையில் இஸ்ரேல் வெளியிட்டுள்ள பட்டியலில் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அதேபோல் ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி, ஸ்வீடன், பெல்ஜியம், பின்லாந்து மற்றும் நோர்வே உள்ளிட்ட நாடுகளுக்கும் விமானப் போக்குவரத்துக்கான பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | பிரதமர் மோடியின் துபை பயணம் ஒத்திவைப்பு
அதேசமயம் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் இருந்து வரும் மக்கள் 7 நாள் கட்டாயத் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.