இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

தினசரி கரோனா பாதிப்பு 2.61%-ஆக குறைவு: சுகாதாரத் துறை

நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜூலை 2021, 2:32 pm

DIN

நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வாரந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2.40 சதவிகிதமாக குறைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது 2-ம் அலையின் வேகம் சற்று குறைந்துள்ளது.

இதன் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,796 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 42,352 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,97,00,430-ஆக உயர்ந்துள்ளது.

இதனால், நாட்டில் நாள்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 2.61 சதவிகிதமாக குறைந்துள்ளது. வாரந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் விகிதம் 5 சதவிகிதத்திலிருந்து 2.40 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.