மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இரண்டு ஆண்டுகளில் விபத்தால் உயிரிழப்பு ஏற்படவில்லை: இந்தியன் ரயில்வே

கடந்த இரண்டு ஆண்டுகளில், விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :31 ஜூலை 2021, 10:31 am

DIN

கடந்த இரண்டு ஆண்டுகளில், விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தகவல் வெளியிட்டுள்ளது.

2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ரயில் விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை மாநிலங்களவையில் ரயில்வே துறை அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், ரயில்வே விபத்து குறித்து பேசிய பாஜக எம்பி சுஷில் குமார் மோடி, "நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் இரண்டு ஆண்டுகளில் எந்த பயணியும் உயிரிழக்கவில்லை.

2016-17 முதல் 2020-21 வரையிலான காலக் கட்டத்தில் மொத்தம் 313 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில், 239 பயணிகள் உயிரிழந்தனர். ஆனால், 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ரயில் விபத்தில் சிக்கி எந்த பயணியும் உயிரிழக்கவில்லை.

2016-17இல் 104 ரயில் விபத்துகள் நிகழ்ந்த நிலையில், 2017-18இல் இது 73ஆக குறைந்தது. 2018-19இல் 55 ரயில் விபத்துகளும் 2019-20இல் 22 ரயில் விபத்துகளும் நிகழ்ந்தன. 2017-18 ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தேசிய ரயில்வே பாதுகாப்பு நிதியிலிருந்து 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மனித தவறுகளால் நிகழும் விபத்துகளை தவிர்க்கும் வகையில் 6,218 ரயில் நிலையங்களில் இண்டர்லாக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.