விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தடுப்பூசி பயத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும்: பிரதமர் மோடி உரை

தடுப்பூசி பயத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்

News image
நரேந்திர மோடி
Updated On :27 ஜூன் 2021, 7:41 am

DIN

தடுப்பூசி பயத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்று 'மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

இன்று நிகழ்ச்சியில் பேசிய அவர், தடுப்பூசி இயக்கம் குறித்தும் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த்தும் பேசினார். 

கரோனாவுக்கு எதிராகப் போராடி நாம் ஒரு அசாதாரண மைல்கல்லை அடைந்துள்ளோம். ஜூன் 21 அன்று புதிய தடுப்பூசி இயக்கம் தொடங்கியது.  ஒரு நாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோர் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. 

மத்தியப் பிரதேசத்தின் பெத்துல் மாவட்டத்தில் உள்ள துலாரியா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு கிராமவாசிகளுடன் பேசிய அவர், அவர்களின் சந்தேகங்களுக்கு மத்தியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தினார். 

நான் இரண்டு டோஸையும் போட்டுக்கொண்டேன். என் அம்மாவுக்கு கிட்டத்தட்ட நூறு வயது, அவர் இரண்டு தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டார். தயவுசெய்து தடுப்பூசிகள் தொடர்பான எதிர்மறையான வதந்திகளை நம்ப வேண்டாம். 

அப்படியே வதந்திகளை பரப்பினாலும் நாம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அனைவரிடமும் வலியுறுத்துவோம். 

இந்தியாவில் உள்ள பல கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளன. அனைவரும் அறிவியலை நம்புங்கள். நம் விஞ்ஞானிகளை நம்புங்கள். பலர் தடுப்பூசியை எடுத்துள்ளனர். அவர்களும் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர். 

இன்னும் கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.