தில்லியில் தடையை மீறு பட்டாசு வெடித்ததாக 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தில்லியில் அதிகரித்துவரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக பசுமை பட்டாசுகள் உள்ளிட்ட எந்த விதமான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | கேரள போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
எனினும் தீபாவளி பண்டிகை தினத்தன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இந்நிலையில் தடையை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 143 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை செய்ததாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 19702489 கிலோ பட்டாசுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 5 பேர் பலி
தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


