மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அபாயகரமான அளவை எட்டிய தில்லி காற்று மாசு

தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :5 நவம்பர் 2021, 10:24 am

தீபாவளி பண்டிகைக்கு பின்னான தரவுகளின் அடிப்படையில் தில்லியில் காற்று மாசுபாட்டின் அளவு அபாயகரமான அளவை எட்டியுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் தில்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் தில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. 
ஜன்பாத் பகுதியில் காற்று மாசின் அளவு 655.07 எனும் அளவை எட்டியுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கு தில்லி அரசு தடை விதித்திருந்தாலும் நகரின் பல்வேறு பகுதிகளில் பாட்டசுகள் வெடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு பிறகு தில்லியில் காற்று மாசு தீவிரமான அளவைக் கடந்த நிலையில் தற்போது அபாயகரமான அளவை எட்டியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.