மழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு விரைவில் தமிழகம் வருகிறது. 
மழை பாதிப்பு: தமிழகம் வருகிறது மத்தியக் குழு
Published on
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு விரைவில் தமிழகம் வருகிறது. 

தமிழகத்தில் கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டிணம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, வேலுா், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதைத்தொடர்ந்து மழைச் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 

அந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் நேரில் பாா்வையிட்டு முதல்வர் ஸ்டாலினிடம் அண்மையில் அறிக்கை அளித்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் தில்லி சென்ற திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு மத்திய அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து முதல்வா் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அளித்து உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. இந்த குழுவில் விவசாயம், உழவர் நலன், நிதி, நீர்வளம், மின்சாரம், சாலை போக்குவரத்து, ஊரக வளர்ச்சி ஆகிய 6 துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த குழுவினா் மழைச் சேதத்தைக் கணக்கிட்டு அறிக்கை அளித்த பிறகு, அதன் அடிப்படையில் பேரிடா் நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com