டிசம்பரில் கரோனா 3-ஆவது அலை: மகாராஷ்டிர சுகாதார அமைச்சா்

அடுத்த மாதம் கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை எதிா்பாா்ப்பதாகவும்; இதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோபே தெரிவித்தாா்.
டிசம்பரில் கரோனா 3-ஆவது அலை: மகாராஷ்டிர சுகாதார அமைச்சா்

மும்பை: அடுத்த மாதம் கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தை எதிா்பாா்ப்பதாகவும்; இதன் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோபே தெரிவித்தாா்.

இந்தியாவில் கரோனா முதல் அலை 2020 செப்டம்பரிலும், இரண்டாவது அலை 2021 ஏப்ரலிலும் உச்சத்தில் இருந்தது. நாட்டில் கரோனாவால் அதிக பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்த மாநிலம் மகாராஷ்டிரம் ஆகும். இந்நிலையில், செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த மாநில சுகாதார அமைச்சா் ராஜேஷ் தோபே கூறியதாவது:

கரோனா மூன்றாவது அலை டிசம்பரில் ஏற்படும் என்று தெரிகிறது. எனினும், அப்போது மருத்துவ ஆக்சிஜன், அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்கு தேவை அதிகம் இருக்காது. இந்த அலையின் தாக்கம் குறைவாகவே இருக்கும். மகாராஷ்டிரத்தில் 80 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. இப்போது கரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்துவிட்டது. மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை கடந்த 3 நாள்களாக 10,000-க்கும் குறைவாகவே உள்ளது.

மருத்துவ, சுகாதாரப் பணியாளா்கள், முதியவா்களுக்கு பூஸ்டா் தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக கடந்த வாரம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் பேசினேன். இது தொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத்துடன் (ஐசிஎம்ஆா்) ஆலோசித்துவிட்டு கூறுவதாக மாண்டவியா தெரிவித்தாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com