
சோனியா காந்தி(கோப்புப்படம்)
தில்லயில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.தமிழகம் சார்பில் மாணிக்கம் தாகூர், பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க- ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு இந்தியா மீண்டும் தோ்வு
மேலும் வரவிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பரவிய பின் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் காணொலியில் இல்லாமல் முதல்முறையாக நேரடியாக கூடியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததால் 2019ஆகஸ்ட் மாதம் தற்காலிக காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.