
கோப்புப்படம்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் டீசல் விலை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை ஒரு லிட்டருக்கு தலா 35 பைசா அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் எரிபொருள் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரு மற்றும் கோவா பகுதிகளில் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவான லிட்டர் ரூ.100ஐக் கடந்து விற்பனையாகி வருகிறது.
இதையும் படிக்க | சிவசேனை ஆட்சியை கவிழ்க்க முயற்சி? போதைபொருள் விவகாரத்தில் சவால் விடும் உத்தவ் தாக்கரே
தலைநகர் தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.49க்கும், மும்பையில் ரூ.111.43க்கும் விற்பனையாகி வருகிறது. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையானது ரூ.102.15க்கும், தில்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.94.22க்கும் விற்பனையாகி வருகிறது.
தொடர்ந்து அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். செப்டம்பா் இறுதியில் வாரத்தில் இருந்து இப்போது வரை பெட்ரோல் விலை 15 முறையும், டீசல் விலை 18 முறையும் அதிகரிக்கத்துள்ளது.
இதையும் படிக்க | மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்; குணமடைந்து வருகிறார்: எய்ம்ஸ்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை ஏற்கெனவே ரூ.100-ஐக் கடந்துவிட்ட நிலையில் தற்போது மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஸா, ஆந்திரம், தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில், லடாக் யூனியன் பிரதேசம் லே நகரிலும் டீசல் விலையும் ஒரு லிட்டா் ரூ.100-யைக் கடந்து விற்பனையாகி வருகிறது.