ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தேர்தல் வன்முறை: நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மம்தா மேல்முறையீடு

தேர்தல் வன்முறை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேல்முறையீடு செய்துள்ளது.

News image

மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)

Updated On :1 செப்டம்பர் 2021, 4:19 pm


தேர்தல் வன்முறை விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேல்முறையீடு செய்துள்ளார். 

மேற்குவங்க தேர்தலுக்கு பிறகு நிகழ்ந்த வன்முறை குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. தோ்தல் முடிவுகள் மே 2-ஆம் தேதி வெளியாகின. அதில் திரிணமூல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

முடிவுகள் வெளியான பிறகு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ்-பாஜக கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. பல இடங்களில் அந்த மோதல் வன்முறையாக மாறியது.

அதில் பலா் கொல்லப்பட்டதாகவும், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தோ்தலுக்குப் பிந்தைய வன்முறை தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வன்முறை சம்பவங்கள் தொடா்பாக 9 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் தொடா்புடையதாக இரண்டு நபா்களை மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் கடந்த 28-ம் தேதி கைது செய்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.