செப்.30க்குள் இதைச் செய்யாவிட்டால் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும்

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படும், பணப்பரிமாற்றங்கள் கூட செய்ய முடியாது என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
செப்.30க்குள் இதைச் செய்யாவிட்டால் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும்
செப்.30க்குள் இதைச் செய்யாவிட்டால் எஸ்பிஐ கணக்கு முடக்கப்படும்
Published on
Updated on
1 min read

செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், வங்கிக் கணக்கு முடக்கப்படும், பணப்பரிமாற்றங்கள் கூட செய்ய முடியாது என்று எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், ஆதார் எண்ணை இணைக்கும் வரை அவர்களது பான் எண் செயல்படாததாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

இது குறித்து நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ தனது சுட்டுரைப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

அதில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும். செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், பான் எண் செயல்படாததாகிவிடும் மற்றும் குறிப்பிட்ட சில பணப்பரிமாற்றங்களும் செய்ய முடியாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்டம், 1961ன் கீழ் 139ஏஏ  பிரிவின்படி, எவர் ஒருவர் பான் அட்டை வைத்திருக்கிறாரோ, அவர் வருமான வரித்துறைக்கு, தனது ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் எண்ணை இணைக்கத் தவறினால், அவருக்கு ஒதுக்கப்பட்ட நிரந்தர கணக்கு எண் செயலற்றதாகவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்குடன் பான் எண்ணை எவ்வாறு இணைப்பது?
எஸ்பிஐ-யின் இணைய வங்கிச் சேவைக்கான www.onlinesbi.com  தளத்துக்குள் லாக் இன் செய்யவும்.

அந்தப் பக்கத்தின் இடது பக்கத்தில் தெரியும் ப்ரொஃபைலுக்குள் சென்று பான் ரெஜிஸ்டிரேஷன் என்பதன் கீழ் இருக்கும் மை அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்யவும்.

புதிய பக்கத்தில் அக்கவுண்ட் நம்பரை செலக்ட் செய்து, உங்களது பான் எண்ணை பதிவு செய்து சப்மிட் செய்யவும்.

உங்களது கோரிக்கை வங்கிக் கிளைக்குச் செல்லும். இந்த கோரிக்கை 7 நாள்களில் வங்கித் தரப்பில் ஏற்கப்படும்.

ஒரு வேளை, உங்களுக்கு இணைய வங்கிச் சேவை இல்லையென்றால், அதே இணைய வங்கிச் சேவையில் ஏடிஎம் அட்டையின் தகவல்களை வைத்தும் இதனைச் செய்யலாம்.

அல்லது, நேராக நீங்கள் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ கிளைக்குச் செல்லுங்கள். உங்களது பான் எண் நகலுடன், அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்கலாம்.

உரிய சோதனைகளுக்குப் பிறகு, உங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படும். இது குறித்து உங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்திருக்கும் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பி வக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com