
வெள்ளத்தில் மூழ்கிய தில்லி: 19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவு பதிவு
19 ஆண்டுகள் இல்லாத மழைப்பொழிவால் தலைநகர் தில்லியின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
தில்லியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
இதையும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1.12 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரிவருவாய்
தில்லியில் செப்டம்பர் மாதத்தின் சராசரி மழையளவு 125.1 மி.மீ. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 112.1 மி.மீ. மழை பெய்துள்ளதாகவும் இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் செப்டம்பர் மாதத்தின் 90 சதவிதமான மழையானது புதன்கிழமை ஒரே நாளில் பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அசாமில் கரோனா பரவல்: முன்னெச்சரிக்கையாக இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்
அதிதீவிர மழைப்பொழிவின் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தில்லியில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 139 மி.மீ. மழை பதிவாகியிருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.