தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்

தில்லி விமான நிலையத்தில் இன்று (செப்-3) ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

News image
தில்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
Updated On :3 செப்டம்பர் 2021, 10:47 am

DIN

தில்லி விமான நிலையத்தில் இன்று (செப்-3) ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பிரபல விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பள பிரச்னையால் தில்லி விமான நிலையத்தில் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்காமல் சில  காரணங்கள் சொல்லி சம்பளம் பிடித்தம் செய்வதாகக்  கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரச்னை முடியும் வரை பணிக்குத் திரும்பப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் பேசியவர்  ' இந்த வேலை நிறுத்தத்தால் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. 'ஏ'பிரிவு ஊழியர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. மற்ற ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும் தலைமையிடத்தில் பேசி வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்படும்' எனத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.