இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நாட்டில் ஒரே நாளில் 42,618 பேருக்கு தொற்று: 330 பேர் பலி; 36,385 பேர் மீண்டனர்

நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 5:03 am

DIN


புதுதில்லி: நாட்டில் தினசரி தொற்று பாதிப்பு சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 42,618 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,05,681-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் சனிக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 42,618 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,45,907-ஆக உயா்ந்துள்ளது. 

நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலமாக கேரளம் உருவெடுத்துள்ள நிலையில், அங்கு தினசரி பாதிப்பும் இறப்பும் தொடா்ந்து அதிகமாகவே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,322 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு 131 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 41 லட்சத்தைக் கடந்துவிட்டது.

36,385 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,21,00,001 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 4,05,681-ஆக உள்ளது. தேசிய அளவில் மீட்பு விகிதம் 97.43 சதவிகிதமாக உள்ளது. சிகிச்சை பெறுவோரின் விகிதம் 1.23 சதவிகிதமாக குறைந்துள்ளது.  

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 366 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,39,895  -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவிகிதமாக உள்ளது.

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 67,72,11,205  கோடியாக அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் 58,85,687 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 52,82,40,038 பரிசோதனைகளும், வெள்ளிக்கிழமை மட்டும் 17,04,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.