'அக். முதல் மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறது இந்தியா'

உபரியாக உள்ள தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா 
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)

அக்டோபர் முதல் மற்ற நாடுகளுக்கு மீண்டும் தடுப்பூசி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். 

இது தொடர்பாக பேசிய அவர், மாநிலங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது போக உபரியாக உள்ள தடுப்பூசிகள் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறினார். 

உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து அடுத்த மாதம் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 37,78,296 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 80,85,68,144 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com