‘ஜம்மு-காஷ்மீரை விற்பனை செய்யும் மத்திய அரசு’: மெகபூபா முப்தி விமரிசனம்

ஜம்மு காஷ்மீரை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் பாஜக மாநிலத்தை விற்பனை செய்ய முயன்று வருவதாக மெகபூபா முப்தி விமரிசனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறைக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிராக வர்த்தகர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி ஜம்மு-காஷ்மீர் மத்திய அரசால் விற்பனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

தான் முதல்வராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட அனைத்து திட்டங்களும் பாஜக தலைமையிலான அரசாங்கத்தால் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த முப்தி, மது வணிகங்கள், சுரங்க ஒப்பந்தங்கள் உட்பட அனைத்து பெரிய திட்டங்களும் ஜம்மு-காஷ்மீர் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

ஜம்மு -காஷ்மீர் குறித்து மத்திய அரசுக்கு தெளிவான கொள்கை இல்லை என்று விமரிசித்த மெகபூபா முப்தி பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜம்மு -காஷ்மீர் மக்களை மத அடிப்படையில் பிரிப்பதாகவும், எந்தவொரு பிரச்சினை குறித்தும் கேள்வி எழுப்புபவர்களை தேச விரோதிகள் என்று பாஜக குறிப்பிடுகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com