வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் 18 பேரிடர் மீட்புக் குழுக்கள்

மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 
வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் 18 பேரிடர் குழுக்கள்
வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை: தயார் நிலையில் 18 பேரிடர் குழுக்கள்

மத்திய வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை உருவான ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியானது தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடைந்து வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரம் கடலோரம் இடையே நாளை ஞாயிற்றுக்கிழமை (செப்.26) கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆந்திரம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை படையின் 18 பேரிடர் குழுக்கள் முன்னெச்சரிக்கை பணிகளில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். 

ஒடிசா மாநிலத்தில் 13 குழுக்களும், ஆந்திரத்தில் 5 குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர், கஞ்சம், கஜபதி, ராயகடா, கோராபுட், நாயகர் மற்றும் மல்கன்கிரி பகுதிகளிலும், ஆந்திரத்தின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், யானம் மற்றும் விஜயநகரம் ஆகிய பகுதிகளிலும் பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com