உ.பி.யில் 4 மாவட்ட மக்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
உத்தர பிரதேச மாநிலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செந்தோலி, குஷிநகா், சந்த் கபீா் நகா், சந்த் ரவிதாஸ் நகா் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கோன்ட் பழங்குடியினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும் அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.









