பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தெலங்கானாவில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கோப்புப்படம்

Published On :

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரகொண்டா மண்டலத்தில் உள்ள துர்கலபள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்தது.

காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கல்வக்குருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பலியானவர்கள் கவுஸ் கான் (55), சாதிக் (55), ஃபர்ஹானா (45), ரூஷன் (24) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சூரியப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெரேடுசர்லாவைச் சேர்ந்தவர்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு தர்காவில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது.

காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.