கரோனா மருந்துகளுக்கு 5% ஜிஎஸ்டி; மற்ற மருந்துகளுக்கு 5-12%

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து 5 முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, நிதித்துறை இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். 

இதேபோன்று கரோனா தொற்றுக்கான மருந்துகள் 5 சதவிகிதம் ஜிஎஸ்டியில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார். 

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த இணையமைச்சர் பங்கச்ராஜ் செளத்ரி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 66% மருத்துவ காப்பீடு திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து மருந்துகளையும் 5 முதக்ல் 12 சதவிகித ஜிஎஸ்டிக்குள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று கரோனா மருந்துகளுக்கு 5 சதவிகிதம் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி 18%. 
 
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையில் நிதியமைச்சகம் வழங்கிய அனைத்து சேவைகளுக்கான ஜிஎஸ்டி வசூல் மற்றும் விலக்குகள் அடங்கிய தரவுகள் உள்ளன என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com