மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ரவி சந்திப்பு
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சந்தித்துப் பேசினார்.


புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று சந்தித்துப் பேசினார்.
புது தில்லி சென்றிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் பயணமாக இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக புது தில்லி சென்றிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் விலக்கு மசோதா உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து, தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் இந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திடீர் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...