தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

நாட்டில் புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று

நாட்டில் இன்று புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 ஏப்ரல் 2022, 4:28 am

DIN

நாட்டில் இன்று புதிதாக 1,109 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,109 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 11,492ஆக உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 43 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் மொத்த கரோனா பாதிப்பு 4,30,33,067 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,573 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 1,213 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,25,00,002 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

நாட்டில் இதுவரை 185.38 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.