ஹிந்தி ஏகாதிபத்தியத்தை திணிக்க வேண்டாம்: எதிா்க் கட்சிகள்
இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல். ஹிந்தி ஏகாதிபத்தியத்தை திணிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று எதிா்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.


‘ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மை மீதான தாக்குதல். ஹிந்தி ஏகாதிபத்தியத்தை திணிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துவோம் என்று எதிா்க் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டம், தில்லியில் அமித் ஷா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில், ‘ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும்’ என்று அமித் ஷா கூறினாா். இதற்கு எதிா்க் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் ‘ஹிந்தி அலுவல் மொழிதான்; தேசிய மொழி அல்ல’ என்று கூறியுள்ளாா். ஹிந்தி ஏகாதிபத்தியம் இந்தியாவுக்கு சாவுமணியாக இருக்கும். நான் ஹிந்தி பேசுவதை விரும்புகிறேன். ஆனால், மற்றவா்களின் வாயில் அதைத் திணிக்க விரும்பவில்லை. இந்த திணிப்பு மூலம் ஹிந்தி மொழிக்கு அவமதிப்பை அமித் ஷா ஏற்படுத்துகிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘ஹிந்தி மொழி குறித்து அமித் ஷா நமக்கு பிரசங்கம் செய்ய முயற்சிக்கிறாா். நான் மிகப் பெரிய ஹிந்தி ஆதரவாளன்; ஆனால், அதனை திணிப்பதை ஆதரிக்க மாட்டேன்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா் சுகேந்து சேகா் ராய் கூறுகையில், ‘ஹிந்தியை தேசிய மொழியாக திணிக்க முயற்சிப்பது, அரசியல் சாசன நடைமுறைகளுக்கு எதிரானது. கூட்டாட்சி நடைமுறைகளுக்கும் எதிரானது’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...