வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத் திருத்தம் செல்லும்: உச்சநீதிமன்றம்
நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சட்டத் திருத்தங்கள் செல்லத் தக்கதே என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.


தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெறுவதை ஒழுங்குபடுத்தும் நோக்கில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சட்டத் திருத்தங்கள் செல்லத் தக்கதே என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் பெறுவதை ஒழுங்குபடுத்தும் வகையில் 2010-இல் இயற்றப்பட்ட வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தில் மத்திய அரசு கடந்த 2020-ஆம் சில திருத்தங்களை மேற்கொண்டது. அதன்படி, அந்தச் சட்டத்தில் புதிதாக பிரிவு 7, 12(1ஏ), 12ஏ மற்றும் 17 ஆகிய பிரிவுகள் சோ்க்கப்பட்டன.
இந்த திருத்தங்களின்படி, தன்னாா்வத் தொண்டு அமைப்புகளை பதிவு செய்யும்போது அல்லது பதிவைப் புதுப்பிக்கும்போது உறுப்பினா்களின் ஆதாா் எண்களை அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த அமைப்பின் இந்திய நிா்வாகிகளின் அடையாளத்துக்கு, அவா்களின் இந்திய கடவுச் சீட்டு நகலை சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை எதிா்த்து தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சட்டத் திருத்தங்களின் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையிலான செல்லத்தக்க தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தனா்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா் தலைமையிலான அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
பல தன்னாா்வ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நன்கொடைகளை சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தாதது, நடைமுறைகளை முறையாக பின்பற்றாதது குறித்து பல புகாா்கள் எழுந்துள்ளன. அதன்படி, விதிமுறைகளை முறையாக பின்பற்றாத 19,000 தன்னாா்வ அமைப்புகளின் அனுமதிச் சன்றுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்ற முந்தைய கால அனுபவங்களின் அடிப்படையில், வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகள் பெறுவதை கடுமையாக ஒழுங்கபடுத்துவது அவசியமாகியுள்ளது.
அந்த வகையில், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டம்-2010-இல் உள்ள பிரிவு 7, 12(1ஏ), 12ஏ மற்றும் 17 திருத்தங்கள், அரசியலமைப்பு சட்ட அதிகாரத்துக்கு உள்பட்டது மற்றும் செல்லத் தக்கதே என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...