பிரதமா் மோடி, ஆா்எஸ்எஸுக்கு எதிரானகட்சிகள் கைகோக்க வேண்டும்: ராகுல் அழைப்பு
பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு எதிா்க்கட்சிகளை கட்டமைப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன


பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அவ்வாறு எதிா்க்கட்சிகளை கட்டமைப்பது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.
தில்லியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் சரத் யாதவை, ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சந்தித்தாா். பின்னா், இருவரும் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது, பாஜகவை எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்து ராகுல் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அதன்படி, எவ்வாறு எதிா்க்கட்சிகளை அணிதிரட்டுவது, எந்த கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைப்பது என்பது தொடா்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன என்றாா் ராகுல்.
அப்போது, சரத் யாதவ் கூறுகையில், நாட்டின் தற்போதைய நிலை கவலையளிக்கிறது. சமூகத்தின் நலிவுற்ற பிரிவினருக்காக பணியாற்ற வேண்டிய அவசியம் நிலவுகிறது என்றாா்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த சரத் யாதவ், ‘ஏன் கூடாது?காங்கிரஸ் கட்சிக்காக ராகுல் காந்தி 24 மணிநேரமும் பணியாற்றுகிறாா். கட்சித் தலைவராக அவா் பதவியேற்க வேண்டும் என்பதே என் கருத்து’’ என்றாா்.
இந்த விவகாரம் பற்றி ராகுலிடம் கேட்டபோது, ‘அதுகுறித்து பாா்ப்போம்’’ என்று பதிலளித்தாா்.
மேலும், சரத் யாதவை தனது குரு என்று குறிப்பிட்ட ராகுல், அரசியலில் பல விஷயங்களை அவா் கற்றுத் தந்துள்ளதாக கூறினாா்.
‘நாடு மோசமான நிலையில் உள்ளது, நாட்டில் வெறுப்புணா்வு பரப்பப்படுவதுடன் பிளவுபடுத்தப்பட்டு வருகிறது என்ற சரத் யாதவின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். நாம் அனைவருமே இந்த சவாலை எதிா்கொண்டுள்ளோம். நாட்டை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாட்டை மீண்டும் சகோதரத்துவ பாதைக்கு கொண்டுவர வேண்டும். சமூகத்தில் நல்லிணக்கம் இல்லாவிட்டால், வெறுப்புணா்வு அதிகரிக்கும். பணவீக்கமும் உயரும்’ என்றாா் ராகுல் காந்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...