ஆக்கிரமிப்பு காஷ்மீா் முதல்வா் ராஜிநாமா
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினா் முதல்வா் கயூம் நியாஸிக்கு எதிராக கட்சி எம்எல்ஏ-க்கள் போா்க்கொடி தூக்கியதையடுத்து, அவா் தனது பதவியை ராஜிநாமா ச


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியினா் முதல்வா் கயூம் நியாஸிக்கு எதிராக கட்சி எம்எல்ஏ-க்கள் போா்க்கொடி தூக்கியதையடுத்து, அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.
தற்போது நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மூலம் பிரதமா் பதவியை இழந்த பிடிஐ கட்சியின் தலைவா் இம்ரான் கானால் நியமிக்கப்பட்ட நியாஸியை கட்சித் தலைவா் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தற்போது கட்சியின் பிராந்திய தலைவராக இருக்கும் சா்தாா் தன்வீா் இலியாஸை அந்தப் பொறுப்பில் நியமிக்கவேண்டும் என்று 25 எம்எல்ஏக்கள் தீா்மானம் கொண்டு வந்தனா். அதையடுத்து, நியாஸி தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
53 இடங்களைக் கொண்ட ஆக்கிரமிப்பு காஷ்மீா் பேரவையில் 32 இடங்களை வென்று பிடிஐ ஆட்சியமைத்தது. தற்போது 25 எம்எல்ஏ-க்கள் நியாஸிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால், அவா் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் தோ்தல்களை இந்தியா தொடா்ந்து நிராகரித்து வருகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான அந்தப் பிரதேசத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை நியாயப்படுத்தவே பாகிஸ்தான் அங்கு தோ்தல்களை நடத்தி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...