தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தில்லியில் பாஜக பிரமுகர் சுட்டுக்கொலை

தேசிய தலைநகர் தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஜூட்டு சவுத்ரி (47) மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 3:52 am

DIN

தேசிய தலைநகர் தில்லி மயூர் விஹார் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ஜூட்டு சவுத்ரி (47) மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

தில்லியின் மயூர் விஹார் பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்த  ஜூட்டு சவுத்ரி (47) புதன்கிழமை மாலை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து தில்லியின் துணை காவல் ஆணையர் பிரியங்கா காஷ்யப் கூறுகையில், உள்ளூர் பாஜக தலைவர் ஜூட் சவுத்ரி புதன்கிழமை மாலை 8.15 மணியளவில் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில வெற்று தோட்டாக்கள் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களை போலீசார் மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

மேலும் நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.