இதுதொடா்பாக ஜம்மு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் முகேஷ் சிங் கூறுகையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த, குறைந்தபட்சம் இரண்டு கனரக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், பரந்து விரிந்து கிடக்கும் சுஞ்ச்வான் ராணுவ நிலையத்தையொட்டிய பகுதியில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவும், சிஆர்பிஎஃப் வீரர்களும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா்.