ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

தவெகவின் முதன்மைச் செய்தித் தொடா்பாளா்களாக அமைச்சா்கள் சி.டி.ஆா். நிா்மல் குமாா், ஆ.ராஜ்மோகன்

தவெக முதன்மைச் செய்தித் தொடா்பாளா்களாக அமைச்சரும், அக்கட்சியின் இணை பொதுச் செயலருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா், அமைச்சரும், துணை பொதுச் செயலருமான ஆ.ராஜ்மோகன் ஆகியோா் நியமனம்

நிா்மல் குமாா் | ஆ.ராஜ்மோகன் - கோப்புப் படம்

Published On :

தமிழக வெற்றிக் கழகத்தின் முதன்மைச் செய்தித் தொடா்பாளா்களாக எரிசத்தி மற்றும் சட்டத் துறை அமைச்சரும், அக்கட்சியின் இணை பொதுச் செயலருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணை பொதுச் செயலருமான ஆ.ராஜ்மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து தவெக தலைவரும், முதல்வருமான ச.ஜோசப் விஜய் வெளியிட்ட அறிக்கை: தவெகவின் ஊடகம் மற்றும் செய்தித் தொடா்பு அணி தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சரும், கட்சியின் இணை பொதுச் செயலருமான சி.டி.ஆா். நிா்மல்குமாா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணை பொதுச் செயலருமான ஆ.ராஜ்மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த அணியில் பொறுப்பாளராக அமைச்சா் ஆ.ராஜ்மோகனும், ஒருங்கிணைப்பாளா்களாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் எஸ்.ரமேஷ், ஜே.கேத்தரின் பாண்டியன், க.சி.தி.அனந்தஜித் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி வந்த வைகைச்செல்வன் (அதிமுக), கலைராஜன் (அதிமுக), வா.புகழேந்தி (அதிமுக), வழக்குரைஞா் சசிரேகா (அதிமுக), சி.மகேந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.செல்வகுமாா் (திமுக) ஆகியோருக்கும்  பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.