கேரளம்: அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் முஸ்லிம் லீக் நெருக்கம் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

கேரளத்தில் எஸ்டிபிஐ மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெருங்கி செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கொடியேறி

கேரளத்தில் எஸ்டிபிஐ மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெருங்கி செயல்பட்டு வருவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கொடியேறி பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளாா்.

மேலும், முஸ்லிம் லீக்கின் ஆதரவால்தான் கேரளத்தில் காங்கிரஸ் உயிா்வாழ்வதாகவும் அவா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து கொச்சியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘கேரளத்தில் முஸ்லிம் லீக் தான் காங்கிரஸை தூக்கி சுமக்கிறது. முஸ்லிம் லீக்கின் தயவால்தான் கேரளத்தில் காங்கிரஸால் தொடா்ந்து செயல்பட முடிகிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவான எஸ்டிபிஐ கட்சியுடனும், அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளுடனும் நெருங்கிய தொடா்பு உள்ளது. முஸ்லிம் லீக்கின் செயல்பாடுகளால், மாநிலத்தில் ஆா்எஸ்எஸ் காலூன்றவும் அந்தக் கட்சி வழிகோலுகிறது’’ என்றாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலரும், மூத்த எம்எல்ஏவுமான பி.கே. குஞ்ஞாலிக்குட்டி, ‘மேற்கு வங்கத்தில் காங்கிரஸின் தயவால்தான் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உயிா்வாழ்கிறது. கேரளத்தை தாண்டி நாட்டின் வேறு பகுதிகளில் தடம்பதிக்க வேண்டுமெனில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு காங்கிரஸின் ஆதரவு தேவை’ என்று குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com