அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை: நிலை என்ன?

கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை
Updated On :2 ஆகஸ்ட் 2022, 2:12 pm

DIN


கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திரிச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியிலுள்ள சாலக்குடி ஆற்றில் அதிக அளவிலான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், யானைக்கு உதவ முடியாத நிலை ஏற்பட்டதாக வனத் துறையினரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. திரிச்சூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மாவட்டத்திலுள்ள பெருங்கள்குத்து அணை திறந்துவிடப்பட்டுள்ளதால், சாலக்குடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

Story image

இந்நிலையில், வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஆற்றின் குறுக்கே வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. ஆற்றின் நடுவே உள்ள சிறிய மேடான பகுதியில், மரங்களையொட்டி பலமணி நேரம் யானை நின்றுள்ளது. பின்னர் தண்ணீரில் வேகம் குறைவாகவுள்ள பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற யானை, அங்குமிங்கும் வெள்ளத்தில் திணறியது.  

அதிரப்பள்ளிக்கு வந்த வனம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள், அதிகப்படியான வெள்ளத்தால் யானையை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. 

எனினும், சிலமணி நேரத்திற்கு பிறகு, வெள்ளப் பெருக்கு குறைவாகவுள்ள காட்டுப்பகுதியையொட்டிய கரைக்கு யானை சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.