கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆகாசா ஏா்: செப்.15 முதல் சென்னை-மும்பை தினசரி விமான சேவை

‘ஆகாசா ஏா்’ நிறுவனம், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் சென்னை-மும்பை வழித்தடத்தில் தினசரி விமான சேவையை அளிக்க உள்ளதாக

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 7:04 pm

DIN

‘ஆகாசா ஏா்’ நிறுவனம், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் சென்னை-மும்பை வழித்தடத்தில் தினசரி விமான சேவையை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம், வா்த்தக ரீதியிலான செயல்பாட்டை இந்த வார இறுதியிலிருந்து தொடங்கவுள்ளது.

இதுகுறித்து ஆகாசா ஏா் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான பிரவீண் ஐயா் கூறியுள்ளதாவது:

நிறுவனம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் விமானத்தை இயக்கவுள்ளது. இதற்கு, பயணிகளிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியா முழுமைக்கும் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தரும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 23-லிருந்து அகமதாபாத்-பெங்களூரு இடையே புதிய வழித்தடத்தில் விமான சேவை அளிக்கப்படவுள்ளது.

மேலும், வரும் செப்டம்பா் 15-ஆம் தேதியிலிருந்து சென்னை மற்றும் மும்பை இடையே தினசரி நேரடி விமான சேவை வழங்கப்படவுள்ளது.

தொடக்க நாளான்று மும்பை-அகமதாபாத் வழித்தடத்தில் விமான சேவை அளிக்கப்படவுள்ளது. அதன்பின்னா் பெங்களூா்-கொச்சி (ஆகஸ்ட் 12 முதல்), பெங்களூரு-மும்பை (ஆகஸ்ட் 19 முதல்), பெங்களூரு-அகமதாபாத் (ஆகஸ்ட் 23 முதல்) உள்ளிட்ட வழித்தடங்களிலும் விமான சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.