வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்துகிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு,
வேலைவாய்ப்பின்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.
அதன்படி இன்று மத்திய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்துகிறது. இதையொட்டி தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குறிப்பாக தில்லியில் காங்கிரஸ் அலுவலகம் உள்ள அக்பர் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஜந்தர் மந்தரைத் தவிர, புதுதில்லி மாவட்டத்தின் முழுப் பகுதியிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டப்பணிகளை துரிதப்படுத்த திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை: 4,097 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு

முதல்வருடன் தருண் குடும்பத்தினா் சந்திப்பு

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

