குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
நாட்டின் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எம்.பி.க்கள் வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அவரைத் தொடர்ந்து பிற எம்.பி.க்கள் வாக்களித்து வருகின்றனர்.
இதையடுத்து, முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வு பெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார்.
.jpg)
சமீபத்தில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் குடியரசு துணைத் தலைவா் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும் (71), எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ராஜஸ்தான் முன்னாள் ஆளுநா் மாா்கரெட் ஆல்வாவும் (80) போட்டியிடுகின்றனர்.
.jpg)
வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும். பின்னா், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.

இதில் மக்களவை உறுப்பினர்கள் 543, மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் என மொத்தம் 788 எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.
இதையும் படிக்க | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடங்கியது! பிரதமர் வாக்களித்தார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கணவரை கொலை செய்து கூவத்தில் வீசிய மனைவி கைது

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு வந்த இமயமலை கருப்பு கரடி, சிறுத்தை பூனைகள்

பிரதமா் மோடியின் திருச்சி வருகைக்குப்பின் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும்: பாஜக
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

