
உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்தை உத்தராகாண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளார்.
இது குறித்து உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: “ ரிஷப் பந்த்க்கு எனது வாழ்த்துகள். அவர் பல இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து அனைவரையும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது கனவுகளை விடா முயற்சியின் மூலம் அடைந்துள்ளார். அவரை மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமிப்பது இளைஞர்களுக்கு ஒரு உந்துதலாக இருக்கும்.” என்றார்.
விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து ரிஷப் பந்த் கூறியதாவது: “ என்னை உத்தரகண்ட் மாநிலத்தின் விளம்பரத் தூதராக நியமித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு எனது நன்றி. அவர் உத்தரகண்ட் மாநிலத்திற்காக பணியாற்ற எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.