பிகாரில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்வர் நிதீஷ் குமாரின் முக்கிய அறிவிப்பு!

பிகாரில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள்: முதல்வர் நிதீஷ் குமாரின் முக்கிய அறிவிப்பு!

பிகாரில் அரசு மற்றும் தனியாரில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
Published on

பிகாரில் அரசு மற்றும் தனியாரில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

சுதந்திர நாளில் முதல்வர் அலுவலகத்தில் தேசியக்கொடி ஏற்றிய பின்னர் உரையாற்றிய  முதல்வர் நிதீஷ் குமார், 'பிகார் மாநிலத்தில் 10 லட்சம் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இது நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் கூடுதலாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். பிகாரில் உள்ள அரசு காலிப் பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும். 

மாநிலத்தில் எதிர்கால குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதே எங்களின் நோக்கம். தற்போது இலக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற நிலையில், இதில் வெற்றி பெறும் பட்சத்தில் இலக்கு 20 லட்சமாக உயர்த்தப்படும். மாநில அரசு இதற்காக கடுமையாக உழைக்கும்' என்றார். 

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் இந்த அறிவிப்புக்கு துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நாம் இணைந்து பிகாரை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வோம் என்று கூறினார். 

சமீபத்தில் பாஜவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிதீஷ் குமார் புதிய கூட்டணி அரசை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X